Tuesday, September 13, 2011

நட்சத்திரங்கள் -அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

நட்சத்திரங்கள் அதிஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி- ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

ரோகிணி- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)

மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை- ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம்- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)

பூசம்- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம்- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம்- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம்- ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம்- ஸ்ரீ மகாலக்மி தேவி

அத்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம்- ஸ்ரீ முருகப் பெருமான்

அனுசம்- ஸ்ரீ லக்மி நாரயணர்

கேட்டை- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம்- ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம்- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம்- ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம்- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)

அவிட்டம்- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)

சதயம்- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி- ஸ்ரீ அரங்கநாதன்

Monday, September 12, 2011

நட்சத்திரங்கள் - தெய்வம்

நட்சத்திரங்கள்      தெய்வம் 




ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்);-  சக்தி

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்  - முருகன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) -சிவன்


திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை 

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -குரு -  தட்சிணாமூர்த்தி

பூசம், அனுசம், உத்திரட்டாதி;- சனி - சாஸ்தா 

ஆயில்யம், கேட்டை, ரேவதி- புதன் - விஷ்ணு

மகம், மூலம், அசுவினி- கேது   - வினாயகர் 

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி )  - மகா லக்ஷ்மி

Monday, September 5, 2011

நவரத்தின மோதிரங்கள்:

நவரத்தின மோதிரங்கள்:





செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை  



மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி  முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.        

நவரத்தினங்கள்  தரும் நற்பலன்கள் 

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால்        அவர் மிக சிறந்த  அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும்  திட்டங்கள்  எல்லாம்  சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு  முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை         ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண்  9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி       எண்  2,7  கொண்டவர்கள்  நவரத்தின மோதிரம் அணிய கூடாது.  வேறு   எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின்  ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.