Monday, August 22, 2011

மரகத பச்சை (emerald)

மரகத பச்சை (emerald)
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும்  வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த  கல்வியை  கொடுக்கும்.


பேச்சாற்றலை  வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை  அடைவார்கள். உடல்  வளர்ச்சி  குன்றியவர்கள் மரகதகல்லை  அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று  நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி  அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.


மரகதத்தின் மருத்துவ குணம் 

மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு  சுகப்பிரசம்  ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.


யாரெல்லாம்  மரகதம் அணியலாம்..?

மிதுனம் மற்றும்  கன்னி  ராசிக்கு  அதிபதி  புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம் 
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள்   மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி  ஆகிய நட்சத்திர காரர்கள்  மரகதம் அணியலாம். எண்கணிதப்படி  5,14,23   ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5  உடையவர்களும்  மரகதம்  அணியலாம். 

No comments:

Post a Comment