Monday, August 22, 2011

நீலம் (sappihire)

நீலம் (sappihire)


ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும்  அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.


தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது      கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண  உறவை  மேம்படுததும்.பகையை நீக்கி  பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு  காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு  உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில்  உள்ளவர்கள் இக்கல்லை  அணிந்தால்  நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.


நீலகல்லின் மருத்துவ குணம் 

கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு  ஆகியவற்றிக்கு  நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும்  குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக  உடல் பருமனை  குறைக்கும்.இக்கல்லை  நெற்றியில்  வைத்து அழுத்தினால்  காய்ச்சல்  குணமாகும். மூக்கில் இருந்து  கசியும்  ரத்தம் நிற்கும்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்

சனி பகவானை அதிபதியாக  கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள்,  மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம்  அணியலாம். 
மேலும் ராகுவின்  எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம்  அணியலாம்.

No comments:

Post a Comment