அம்பர் (amber), அக்வா மெரின் (aquamarune)
அம்பர்
அம்பரின் பண்புகள்
அரசியல் வாதிகளுக்கும்,அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கும் சம்பள உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.
மருத்துவ குணங்கள்
ஜீரண கோளாறுகளை சரி செய்கிறது,கருச்சிதைவை தடுக்கும்,கண்பார்வை கோளாறுகள்,காதுவலி,சிறுநீரகம் சம்பந்த பட்ட வலிகள் நீங்கும்.பிரசவ காலத்தில் அம்பர் பொடியை தூபமிட்டால் நன்மை கிடைக்கும்.
யாரெல்லாம் அம்பர் அணியலாம்..?
பொதுவாக இந்த கல்லை அனைவருமே அணிந்து பலன் பெறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் களும் அணியலாம்.
மாணிக்கம் மற்றும் பவழ கற்களுக்கு மாற்றாகவும் இதனை அணியலாம்.
அக்வா மெரின்
திரைப்படதுறையில் இருப்பவர்களுக்கும்,ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்களுக்கும் இந்த கல் மிகுந்த நற்பலனை அளிக்கும். மணவாழ்வில் பிரிய நினைப்பவர்கள் இந்த கல்லை அணிந்தால் பிரிவினை நீங்கி ஒன்று சேர்வார்கள்.
மருத்துவ குணங்கள்
உடலில் எப்போதும் உஷ்னத்துடன் இருப்பவர்கள் இக்கல்லை அணிந்து கொண்டால் உஷ்ணம் சமனிலை அடையும். வாதம்,பித்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு உகந்தது.பல்,கழுத்து சம்பந்த பட்ட நோய்களை குணமாக்கும்.
யாரெல்லாம் அணியலாம்..?
4, 13,22,31 மற்றும் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இக்கல்லை அணியலாம். நீலம் மற்றும் மரகதத்திற்க்கு மாற்றாகவும் இதனை அணிந்து பலன் பெறலாம்.
No comments:
Post a Comment